புதுச்சேரி, முத்திரப்பாளையம் பகுதியில் கனரா வங்கியின் ஏ.டி.எம் மையம் இயங்கிவருகிறது. இங்கு இன்று பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர் ஏ.டி.எம் இயந்திரம் திறந்த
நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கனரா வங்கி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில், ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த அலுவலர்கள் வந்து பார்வையிட்டனர். இது தொடர்பான, விசாரணையில் நேற்று மாலை தனியார் நிறுவன ஊழியர்கள் முஸ்தபா, வெங்கடேசன் ஆகியோர் 12 லட்சம் பணத்தை ஏ.எடி.எம் இயந்திரத்தில் நிரப்பியதும், மேக்னட் கருவியின் பூட்டை சரியாக மூடாதது தெரியவந்தது. இதனால் கதவு தானாக திறந்துள்ளதும், பணம் குறையாமல் அதே அளவில் இருந்ததும் ஆய்வில் தெரிய வந்தது.
இதையும் படிங்க: சூப்பர் மார்க்கெட்டில் செல்போன் திருடிய கடற்படை தள ஊழியர்