இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சமேச்சி ஃபகலா (Chamechi Fagala) கிராமத்தில் வசித்துவந்தவர் பவன் பாஹதர். இவரது மனைவி மீனா (22).
கணவன் மனைவி இடையே தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று மீனா தனது கணவன் பவன் பாஹதரை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் பவன் பாஹதரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்துள்ளனர். அப்போது, பவன் பாஹதர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார்.
இது குறித்து வீட்டின் உரிமையாளர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மீனாவை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் படிக்க: பிரதமர் மோடிக்கு பேனர் வைக்கும் அதிமுக, எதிர்க்கும் கமல்!