குஜராத் மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதில் கூறிய உள் துறை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா, “குஜராத் மாநிலத்தைப் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று அடிக்கடி கூறப்படுகிறது,
ஆனால், 2018-2019ஆம் ஆண்டில், மாநிலத்தில் பாலியல் வன்புணர்வு, கூட்டு பாலியலுக்காக இரண்டாயிரத்து 723 வழக்குகள் காவல் துறையினரால் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில், ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன” எனத் தெரிவித்தார்.
இது குறித்து தரியாபூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ கயாசுதீன் ஷேக் கூறுகையில், 'பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோ' என்ற முழக்கத்தை வழங்குவதற்காக அரசு அறியப்பட்ட ஒரு மாநிலத்தில் பாலியல் வன்புணர்வு வழக்குகள் அதிகரித்துவருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் நிதி உதவி வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: குஜராத்தில் உலகின் உயரமான கோயிலுக்கு அடிக்கல்