ETV Bharat / bharat

ஊரடங்கால் இருண்டுபோன உ.பி. விவசாயிகளின் வாழ்க்கை - கரோனா பாதிப்பு

லக்னோ: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேச விவசாயிகள் பயிர்களை அறுவடைசெய்ய போதிய வேலையாள்கள், அறுவடை இயந்திரங்கள் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

COVID 19 Pandemic Novel Coronavirus Outbreak உ.பி. விவசாயிகள் அறுவடை பயிர் அறுவடை கரோனா பாதிப்பு உத்தரப்பிரதேம்
Harvest Season
author img

By

Published : Mar 29, 2020, 1:30 PM IST

Updated : Mar 29, 2020, 1:43 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு வணிகம், தொழில் நிறுவனங்கள், சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளன. இதனால், பாதிக்கப்பட்டிருப்பது நாம் மட்டுமல்ல நமது நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயமும்தான். அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விவசாயிகள் இரண்டு மடங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏனெனில், அவர்கள் லட்சக்கணக்கான ஏக்கரில் கரும்பு, கோதுமை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். அவை தற்போது அறுவடைக்குத் தயாராகியுள்ளன. இந்நிலையில், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் விவசாயிகள் பயிர்களை அறுவடை செய்ய வேலை ஆள்கள், இயந்திரங்கள், சேமிப்புக் கிடங்கு இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இது குறித்து விவசாய வல்லுநர் அமோகாந்த் கூறுகையில், "தற்போது கோதுமை பயிர் அறுவடைக்குத் தயாராகியுள்ளது. ஆனால், வேலையாள்கள் கிடைக்கவில்லை. அறுவடை செய்ய இனியும் காலம் தாமதம் ஏற்பட்டால் பயிர்கள் சேதமாகிவிடும்.

அப்படி நடந்தால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். ஊரடங்கு உத்தரவு காரணமாக அறுவடை இயந்திரங்கள்கூட கிராமத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை" என்றார்.

இதைத் தொடர்ந்து பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ஹர்னம் வர்மா கூறுகையில், "கோதுமை, சனா, கடுகு, உருளைக் கிழங்கு உள்ளிட்ட பயிர்களின் அறுவடை ஏற்கனவே நடந்துவருகிறது. ஆனால், அறுவடையை பாதியில் நிறுத்திவிட்டால் நாசமாகிவிடும். எனவே இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு ஏதும் செய்யாவிட்டால் விவசாயிகள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள்" என்றார்.

திட்ட ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் சுதிர் பவார் கூறுகையில், "ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இதனிடையே, பருவநிலை மாறுபட்டு மழை பெய்தால் 30 விழுக்காடு பயிர்கள் நாசமடைய வாய்ப்புள்ளது.

மேலும் வயலில் பயிர்களை அப்படியே விட்டால் அவை வாடிவிடும். மத்திய அரசு விவசாய நிவாரணங்களை அறிவித்திருந்தாலும், அது எப்போது விவசாயிகளுக்குச் சென்றடையும் என்பது கடவுளுக்குத் தெரியும்.

இருப்பினும், விதை, உரங்கள், பூச்சிக்கொல்லி கடைகளைத் திறக்க மாநில அரசுக் கேட்டுக்கொண்டுள்ளது. வேலையாள்கள் வயல்களில் வேலைசெய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் கரோனா வைரஸ் குறித்த அச்சம் மக்களின் மனதில் இருக்கிறது. எனவே விவசாயிகளின் துயரங்களைப் போக்க அரசு சரியான இயந்திரங்களை வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஊரடங்கு எதிரொலி: பூவுக்கு நிவாரணம் கேட்கும் விவசாயிகள்

Last Updated : Mar 29, 2020, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.