புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவரின் மகன் சாய் பிரணவ். இவர், மூலக்குளத்தில் உள்ள பெத்தி செமினர் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்துவருகிறார். கண்களை மூடிக்கொண்டு புள்ளிகளை இணைத்து ஓவியம் வரையும் இவரது திறமையை சோதனையிட, இன்று அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் புதுச்சேரி புத்தக ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் அலுவலர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர்.
இதில், கண்களை கட்டிக்கொண்டு புள்ளிகளை இணைத்து 16 ஓவியங்களை 11 நிமிடம் 57 வினாடிகளில் வரைந்து முடித்து சாய் பிரணவ் சாதனை படைத்தார். இதேபோல், கண்களை துணியால் மூடிக்கொண்டு இந்திய ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்கள் மற்றும் பணத்தின் மதிப்பு ஆகியவற்றை கண்டறிந்து அசத்தினார். இதன் மூலம் சாய் பிரணவ் அசிஸ்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்தார்.