கடந்த மாதம் புதுச்சேரி மாநில சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது அப்போது புதிய சபாநாயகர் சிவக்கொழுந்து, பேரவைத் தலைவர் பொறுப்பேற்றுக் கொண்டார். சட்டப்பேரவை கூட்டத் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. சபாநாயகர் சிவக்கொழுந்து திருக்குறள் கூறி சபையை தொடங்கி வைத்தார்.
பேரவையின் முதல் நிகழ்வாக மறைந்த புதுச்சேரி திமுக முன்னாள் முதல்வர் ஜானகிராமன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று முன்னாள் மறைந்த முதல்வர்கள் ஆர் வி ஜானகிராமன், ஃபாரூக் மரைக்காயர், சண்முகம் ஆகியோருக்கு விரைவில் புதுச்சேரி மாநகரில் சிலை அமைக்கப்படும் என்று பேரவையில் தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து சபாநாயகர் சிவக்கொழுந்து கூறுகையில், ”இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் புதுச்சேரி நீர்வள பாதுகாப்புக்கான அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாளைய கூட்டத்தில் நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க, தமிழ் மொழி உட்பட மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்க, ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை செயல்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசை வலியுறுத்தி நாளைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது” என்றார்