பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து அமைக்கப்படும் சாலைகள் பிளாஸ்டிக்கை ஒழித்துக்கட்ட ஒரு தீர்வாக உள்ளது. இதனை, அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டம் மெய்யாக்கியுள்ளது. மாவட்டத்தில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் அதன் கழிவுகள் சாலைகள் போடுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
மாவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்த அதே நேரத்தில், கட்டமைப்பு உபகரணங்களின் பற்றாக்குறையும் ஏற்பட்டது. எனவே, அதற்குப் பதில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களைப் பயன்படுத்தி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது.
இதுகுறித்து பொதுப்பணித் துறையில் பணியாற்றும் துணைக் கோட்ட அலுவலர் பஞ்சில் கூறுகையில், "115 மாவட்டங்களைப் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களாக நிதி ஆயோக் அறிவித்துள்ளது. அதில், கோல்பாராவும் ஒன்று. 2018ஆம் ஆண்டு கோல்பாரா மாவட்டத்தில் சாலை இணைப்பு வசதி 49 விழுக்காடாக இருந்தது. இணைப்பு வசதிகளை அதிகரிக்க நிதி ஆயோக் பரிந்துரைத்தது. எனவே, மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல அரசு முனைப்பு காட்டியது.
கோல்பாராவில் 565 கி.மீ. நீள சாலையை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்திற்குள் சாலை போடுவதற்கான உபகரணங்களை எடுத்துச் செல்ல மத்திய அரசு தடை விதித்தது. சுற்றுச்சூழலுக்கு உகந்த சாலை அமைப்பதற்கான மாற்றைத் தேட தொடங்கினோம். மாவட்டத்தில் இணைப்புத் திட்டங்கள் முடங்க நாங்கள் விரும்பவில்லை" என்றார்.
பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி 75 கி.மீ. நீள சாலையைப் போடுவதற்கு கோல்பாராவின் பொதுப்பணித் துறை முடிவெடுத்தது. 75 கி.மீ. நீள சாலையில் 45 கி.மீ. நீள சாலை போடுவதற்கு சூரத்திலிருந்து 37,260 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டன. மீதமுள்ள 30 கி.மீ. சாலை போடுவதற்கு கோல்பாராவின் பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்பட்டன.
இதையும் படிங்க: நெகிழிக்கு 'குட்பை' சொல்லி சணலுக்கு 'வெல்கம்' சொல்லும் மேற்கு வங்கம்!