வடகிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக பிகார், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அஸ்ஸாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் 26.38 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மோரிகான் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 96ஆக உயர்ந்துள்ளது.
அரசு நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. பல மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 564 நிவாரண முகாம்களில் 47 ஆயிரத்து 772 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.
கோல்பாரா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இம்மாவட்டத்திலுள்ள 4.7 லட்சம் பேர் வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ள நீர் பாய்வதால், அஸ்ஸாம் மாநிலத்தில் சூழல் மேலும் மோசமாகியுள்ளது.
இதையும் படிங்க: அஸ்ஸாம் வெள்ளம்: வீடுகளை இழக்கும் பொதுமக்கள்