ETV Bharat / bharat

அசாம் வெள்ளம்: காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்து வெளியேறும் விலங்குகள்!

திஸ்பூர்: பிரம்மபுத்திர நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்து வனவிலங்குகள் வெளியேறத் தொடங்கியுள்ளன.

flood
author img

By

Published : Jul 15, 2019, 5:10 PM IST

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒருவார காலமாக கடும் மழை பெய்துவருகிறது. இதனால், அசாம், திரிபுரா உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள 28 மாவட்டங்களிலும் மழைக் காரணமாக 26 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அசாமின் பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளதால், அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மூழ்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெள்ள பாதிப்புகளில் சிக்கி 13 பேர் பலியாகினர். இதுமட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட பாதுகாப்பு முகாம்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெள்ளமானது மனிதர்களை மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அங்குள்ள காசிரங்கா தேசிய பூங்கா முழுவதுமாக வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. இதனால், அந்த பூங்காவில் இருந்த விலங்குகள் அனைத்தும் வெளியேறத் தொடங்கியுள்ளன. பூங்காவில் இருந்து வெளியே வரும் விலங்குகள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து அருகிலுள்ள கார்பி மலைப்பகுதிக்கு செல்கின்றன.

அசாம் வெள்ளம்

மேலும் பூங்காவில் இருந்த வெளியே வரும் மான் உள்ளிட்ட விலங்குகளை அங்குள்ள பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடமும் ஒப்படைத்த வண்ணம் உள்ளனர். இந்த விலங்குகளை சில சமூக விரோதிகள் வேட்டையாடக்கூடும் என்பதால் அப்பகுதியில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Intro:Body:

As the whole of Assam is under flood, Kaziranga National Park has been submerged by the water of the Brahmaputra river. The wild animals inhabiting in the National Park are fleeing to the Karbi Hills. The NH37 which runs along the National Park has also been submerged by water. Wild animals are crossing the busy highway to get to the highlands of the Karbi Hills. The animals which have escaped to nearby areas are being rescued by the locals and being handed over to the Forest Department. Although the national highway has been closed for commute yet some vehicals are being allowed to cross the forest area under the survelliance of the forest officials and general public.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.