ETV Bharat / bharat

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம்: நிலைமையில் தொடர் முன்னேற்றம்! - அசாம் வெள்ளம்

திஸ்பூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாமின் நிலைமையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அசாம்
அசாம்
author img

By

Published : Aug 5, 2020, 8:04 PM IST

நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று தீவிரப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அஸ்ஸாம், பிகார் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. நேபாளத்தின் எல்லையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, இரு மாநிலங்களும் கடும் பாதிப்பிற்குள்ளாகின. தற்போது, இயல்பு நிலை அங்கு படிப்படியாக மாறி வருகிறது.

இருப்பினும், 15 மாவட்டத்தில் வாழும் 1.96 லட்சம் பேர் வெள்ள பாதிப்பால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பாதிப்புக்குள்ளான இடங்களுக்குச் சென்ற அஸ்ஸாம் மாநிலத்தின் ஆளுநர் ஜெக்தீஷ் முகி, நிலைமை குறித்து ஆராய்ந்தார். வெள்ளத்தால் மூழ்கிய அஸ்ஸாமின் பார்பேட்டா, தெற்கு சல்மாரா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.93 லட்சமாக குறைந்துள்ளது என மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

அசாம் வெள்ளம்

ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை, 19 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியதில் 8.54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இந்தாண்டு மட்டும், நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றில் சிக்கி மொத்தம் 136 பேர் உயிரிழந்துள்ளனர். 110 பேர் வெள்ளப் பாதிப்பாலும் 26 பேர் நிலச்சரிவிலும் சிக்கி உயிரிழந்துள்ளனர். பெரும் பாதிப்படைந்த கோல்பாரா மாவட்டத்தில் 1.05 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, மோரிகான் மாவட்டத்தில் 28,126 பேரும்; பக்சா மாவட்டத்தில் 15,000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புக்குள்ளான ஏழு மாவட்டங்களில் 26 மறு வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அங்கு தற்போது 4,129 பேர் வசித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நாட்டை அதிகமாக நேசிப்பதால் நியாமற்ற நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம் - முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.