உத்தரகாண்ட் மாநிலத்தில் உலக சுற்றுச்சூழல் பள்ளி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த பள்ளி சுற்றுச்சூழல் ஆய்வுகளின்படி, வேகமாக வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் கல்வியின் தேவையைப் பூர்த்தி செய்யும். இமயமலையில் அமைந்துள்ள இந்த பள்ளி அதன் மாணவர்களிடையே ஆழமான சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை விழுமியங்களை வளர்க்கும்.
இப்பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய மாணவர்கள் உள்ளனர். மொபியஸ் அறக்கட்டளை இந்தப் பள்ளியை நிறுவவுள்ளது. திங்களன்று டாபர் இந்தியா லிமிடெட் முன்னாள் தலைவர் பிரதீப் பர்மன், உத்தரகாண்ட் சட்டமன்ற சபாநாயகர் பிரேம்சந்த் அகர்வாலை சந்தித்தார். அந்த கூட்டத்தில் உலக சுற்றுச்சூழல் பள்ளி அமைத்தல் குறித்து இருவரும் விவாதித்தனர்.
இவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சூரிய ஆற்றல் ஆகியத் துறைகளில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பிரதீப் பர்மன் கூறும்போது, 'சுற்றுச்சூழல் விரைவாக தடைபட்டு வருவதால், அதுகுறித்த கல்வியின் தேவை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த தேவையை மனதில் வைத்து, உத்தரகாண்ட் மலைகளில் வேறு வகையான சுற்றுச்சூழல் பள்ளியை உருவாக்க விரும்புகிறோம்' என்றார்.
இயற்கை வளங்களை நிரப்ப ஒவ்வொரு நபரும் எவ்வாறு செயல்பட வேண்டும், அதனை உபயோகிப்பது என இப்பள்ளி முன்மாதிரியாக இருக்க போகிறது. அந்த வகையில் ஆசியாவிலேயே முதல் சுற்றுச்சூழல் பள்ளியாக இது விளங்கப் போகிறது.
இதையும் படிங்க: சுற்றுச்சூழல் விருதை பெற மறுத்த கிரேட்டா தன்பெர்க்!