அண்ணல் காந்தியின் 150ஆவது பிறந்த நாள் விழா அக்.2ஆம் தேதி நாடு முழுவதும் கடைபிடிக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பங்கேற்றார்.
அதில் முதலமைச்சர் அசோக் கெலாட் பேசுகையில், ’சுதந்திரம் பெற்ற பல நாடுகள் தற்போது பிரிந்துவிட்டன. ஆனால் அண்ணல் காந்தி காட்டிய வழிகளை பின்பற்றுவதால் இந்தியா ஒருங்கிணைந்து ஒன்றாக உள்ளது.
ஆனால் மத்தியில் பாஜக ஆட்சியமைந்ததையடுத்து சில ஆண்டுகளாக நாட்டில் அவநம்பிக்கையும், பயமும் மக்களுக்கு அதிகரித்து வருகிறது. அதனை மாற்ற வேண்டுமென்றால் காந்திய பாதையை பின்பற்ற வேண்டும். ஆனால், அண்ணல் காந்தியின் பாதையிலிருந்து மாறி, நாடு வேறு பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. பல மொழிகளும், பல கலாசாரங்களுமே இந்தியாவின் பலம்' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்கலாமே: பெண் காவலரிடம் தவறாக நடந்துகொண்ட பாஜக எம்.எல்.ஏ!