கேரளாவில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தமாக 72 ஆயிரத்து 339ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை இல்லாத வகையில் கடந்த இரண்டு நாள்களும் தொற்று பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியதால், மாநில அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, பொது இடங்களில் 5 பேருக்கு மேல் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நாளை(அக்டோபர் 3) முதல் அக்டோபர் 31ஆம் தேதிவரை அமலில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல், கரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தேவைப்பட்டால் மாவட்ட ஆட்சியர்கள் 144 தடை உத்தரவை அமல்படுத்திக்கொள்ளலாம். இருப்பினும், 50 பேர் கலந்துகொள்ளக்கூடிய திருமணங்களுக்கும், அதிகபட்சம் 20 பேர் கலந்துகொள்ளக்கூடிய இறுதிச் சடங்குகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது எனக் குறிப்பிட்டுள்ளனர்.