அருணாசலம் பிரதேசத்தில், கடந்த வியாழக்கிழமை(ஜூலை 16) எல்லை சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ) இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் ஹர்பால் சிங், மாநில தலைமைச் செயலாளர் நரேஷ்குமார், பிற அலுவலர்களுடன் காணொலி வழியாக கலந்துரையாடினார்.
அப்போது பேசிய பிஆர்ஓ இயக்குநர் ஹர்பால், கரோனா தொற்றால் தொழிலாளர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதால் எல்லைகளில் சாலைப் பணிகள் தாமதமாகியுள்ளன.
அப்பணியை மீண்டும் விரைவுப்படுத்த வேண்டும். அனைத்து அலுவலர்களும் உத்வேகத்துடன் செயல்பட்டு பணியை முடிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். மேலும், வீடியோ கான்பரன்சிங்கில் மாநிலத்தின் எல்லைகளில் நடைபெறும் அனைத்து சாலைப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது
இதுகுறித்து பேசிய மாநில நில மேலாண்மை செயலாளர் டாக்டர் சோனல் ஸ்வரூப், "மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தத் திட்டத்திற்கு அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது.
குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்த அரசு, பணிகளை விரைவாக முடித்திட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய எல்லை மாநிலமான அருணாச்சலம் பிரதேசம் மியான்மருடன் 440 கி.மீ எல்லையையும், பூட்டானுடன் 160 கி.மீ எல்லையையும், சீனாவுடன் 1,080 கி.மீ எல்லையையும் பகிர்ந்து கொள்கிறது.