முன்னாள் நிதியமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான அருண் ஜேட்லி சில வருடங்களாகச் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இதற்காகச் 2018ஆம் ஆண்டு சிறுநீரக அறுவை சிகிச்சையும் செய்துகொண்டார். இந்நிலையில், அருண் ஜேட்லிக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில், இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அருண் ஜேட்லியின் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவித்துள்ளது.
அருண் ஜேட்லி தன் உடல்நிலை சீரற்று இருப்பதால், தற்போதைய மோடி அரசின் அமைச்சரவையில் தான் இடம்பெற விரும்பவில்லை என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.