ETV Bharat / bharat

காஷ்மீரில் அமைதி திரும்ப சட்டப்பிரிவு 370 தேவை - பரூக் அப்துல்லா

ஜம்மு காஷமீரில் அமைதி திரும்ப சட்டப்பிரிவு 370 மீண்டும் கொண்டுவர வேண்டும் என மக்களவை உறுப்பினர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Farooq Abdullah
Farooq Abdullah
author img

By

Published : Sep 22, 2020, 9:21 PM IST

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், ஸ்ரீநகர் மக்களவையின் தற்போதைய உறுப்பினருமான பரூக் அப்துல்லா சட்டப்பிரிவு 370 தொடர்பாக மக்களவையில் உரையாற்றினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பின் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் விடுதலைக்குப்பின், மீண்டும் மக்களவை கூட்டத் தொடரில் தற்போது பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் சட்டப்பிரிவு நீக்கம் தொடர்பாக அவர், "காஷ்மீரில் தற்போதும் என்கவுன்டர் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. அங்கு தொடர்ந்து அமைதியற்ற சூழல் நிலவிவருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் ஐந்தாம் தேதி மேற்கொண்ட நடவடிக்கையை திரும்பப் பெறும்பட்சத்தில்தான் அங்கு மீண்டும் அமைதிக்கான சூழல் உருவாகும். எனவே, இது தொடர்பான செயல்பாடுகளில் அரசு ஈடுபட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'அவசர சட்டமுன்வடிவுகளுக்கு குடியரசுத் தலைவர் அங்கீகாரம் அளிக்கக் கூடாது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.