ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த இந்திய அரசிலமைப்பு சிறப்பு சட்டம் 370-ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5ஆம் தேதி நீக்கியது.
இதன்காரணமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்து, குழப்பம் விளைவிக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாக இந்திய ராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது.
வடக்கு காஷ்மீரின் பாராமுல்லாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இதுதொடர்பாக, “ காலாட்படை பிரிவு காஷ்மீர் தலைமை அலுவலர் வீரேந்திர வாட்ஸ் கூறும்போது, "கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் முக்கியமான முடிவை நாங்கள் பெற்றதிலிருந்து காஷ்மீர் மக்களைத் தூண்டுவதற்கான முயற்சியில் பாகிஸ்தான் தோல்வியடைந்து வருகிறது.
எனவே அவர்கள் பயங்கரவாதிகளைத் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவச்செய்ய முயற்சித்து வருகிறார்கள்" என்று கூறினார். மேலும், குப்வாரா மற்றும் ரஜோரி நிலைகளில் பாகிஸ்தான் இதேபோன்ற ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டது. அது முறியடிக்கப்பட்டது. தொடர்ந்து எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துவருகிறது” என்றார்.
மேலும், சுமார் 300 பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்ய பாகிஸ்தான் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.