ETV Bharat / bharat

மும்பையில் வடமாநில தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி!

மும்பை : மகாராஷ்டிராவில் பணியாற்றிய வடமாநிலங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கக் கோரி  தெற்கு மும்பையில் உள்ள நாக்பாடாவில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பையில் வடமாநில தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி!
மும்பையில் வடமாநில தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி!
author img

By

Published : May 15, 2020, 9:35 AM IST

மகாராஷ்டிராவில் பணியாற்றிவந்த பிகார், மத்திய பிரதேசம், ஒடிஸா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், கோவிட்-19 ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தெற்கு மும்பை நாக்பாடாவில் உள்ள புகழ்பெற்ற ஓட்டல் ரிப்பன் பெலஸ் அருகே நேற்று (மே 14) ஒன்று கூடிய வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரயிலில் அனுப்பிவைக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வட மாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நாக்பாடா காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடுமாறு கூறினர். மேலும், மகாராஷ்டிரா அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்தனர்.

வட மாநில தொழிலாளர்களில் பெரும்பாலானோர் சரிபார்ப்பு, பிற முறைகளுக்காக தங்கள் ஆவணங்களை காவல்துறையிடம் அளித்தும் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர்.

இது தொடர்பாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், வடமாநில தொழிலாளர்கள், ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவந்ததால் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றது. அவர்கள் அதிக எண்ணிக்கையில் தெருக்களில் வந்ததால் சமூக அமைதி குலையும் சூழல் ஏற்பட்டது. அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதென அறிய முடிகிறது.

Around 1,000 migrants protest in Mumbai, police use force
மும்பையில் வடமாநில தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி!

அதன்பின் காவல்துறையினர் நடத்திய தடியடி காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

இதையடுத்து, சிக்கித் தவிக்கும் குடிபெயர்ந்தோர் பயணம் மேற்கொள்ள மும்பை சென்ட்ரலில் இருந்து உத்தர பிரதேசம் வரை செல்லக்கூடிய வகையில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : 20 லட்சம் கோடி - என்னென்ன திட்டங்கள்? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.