அருணாச்சல பிரதேசம் தவாங் மாவட்டத்தில் உள்ள செலா பாஸில் பனிப் பொழிவு அதிகரித்துள்ளது. இதில், சிக்கித் தவித்த 390 பேரை இந்திய ராணுவம் மீட்டுள்ளதாக பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
பனிபொழிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி மார்ச் 7ஆம் தேதி தொடங்கி, 8ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது. 16 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பனிப் பொழிவில் சிக்கியவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.
பின்னர், மீட்கப்பட்ட அனைவரைக்கும் மருத்துவ உதவியும், சூடான சிற்றுண்டியும் வழங்கப்பட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஹர்ஷ் வர்தன் பாண்டே தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பனி பாறைகளில் சிக்கித் தவித்த 536 மீனவர்கள் மீட்பு!