ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக பனிப்பொழிந்து வருகிறது. இதனால் சாலை வசதி இல்லாத மாவட்ட மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை நினைவேற்றிக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கரோனா பரவல் உள்ள இச்சூழலில் அம்மாநில மக்களுக்கு உதவ இந்திய ராணுவம் முன்வந்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் அற்ற பகுதிகளில் வசித்துவரும் 350 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள், மருத்துவப் பொருள்கள் அடங்கிய முதலுதவி பெட்டிகளை இந்திய ராணுவம் வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாது அம்மக்களுக்காக மருத்துவ முகாம், கால்நடை முகாம் ஆகியவற்றையும் நடத்தியுள்ளது.
இந்த முகாம்கள் மூலம், குஜ்ஜர், பேக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனுற்றதாக, பாதுகாப்பு துறை செய்திதொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து பேசிய அவர், " ரம்பன் மாவட்டத்தின் சம்பர், டேக்நாரி, பன்ஞ், பஜான், மால்பட்டி ஆகிய பகுதிகளில் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அத்தியாவசியப் பொருள்கள் தொகுப்பில், அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவையும், மருத்துவ பெட்டகத்தில் சோப், மறுமுறை பயன்படுத்தக்கூடிய மாஸ்க், சானிடைசர் ஆகியயைவும் இடம்பெற்றுள்ளது. மக்களின் கோரிக்கையினை ஏற்று இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது" என்றார்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு அட்டூழியம் - மெஹபூபா முப்தி