சீன ராணுவத்தினர் கடந்த சில தினங்களாகவே இந்திய எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்திவருகின்றனர். அதுமட்டுமின்றி, கால்வான் நாலா, சிக்கிம், லடாக் ஆகிய பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சீன ராணுவத்தினர் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதால், கால்வான் நாலா எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தெரிகிறது.
இந்நிலையில், லடாக்கிலுள்ள லே பகுதிக்கு விரைந்த ராணுவ தலைமைத் தளபதி நரவனே வடக்கு ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஒய்.கே. ஜோஷி, 14 கார்ப்ஸ் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் ஆகியோர் லேவில் உள்ள உயர்மட்ட ராணுவ தளபதிகளுடன் நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.
சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் குறைந்தது ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. தேசியப் பாதுகாப்பு களத்தில் உயர்மட்டக் குழுவினரால் நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு, பதற்றத்தைக் குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் செயல்பட உதவும் சீன செயற்கைக்கோள்