ETV Bharat / bharat

லடாக் சீன ஆக்கிரமிப்பு: நேருவை குறைகூறும் ராணுவ உயர் அலுவலர்கள்! - சீன ஆக்கிரமிப்பு

டெல்லி: லடாக் எல்லை பிரச்னையை மத்திய அரசு கையாளும் முறை குறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் விமர்சனங்கள் இழிவானது என ஓய்வுபெற்ற ராணுவ உயர் அலுவலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லடாக் சீன ஆக்கிரமிப்பு பிரதமரைப் போல நேருவை குற்றம்சொல்லும் இராணுவ உயரலுவலர்கள்!

author img

By

Published : Jun 12, 2020, 10:36 AM IST

லடாக்கில் இந்தியாவின் நிலப்பரப்பை சீனா கைப்பற்றி ராணுவ ரீதியாக ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டிய, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் பிரதமரின் மௌனத்தைக் களைத்து மக்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டுமென நேற்று முன்தினம் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு இந்திய ராணுவத்தின் வான்படையைச் சேர்ந்த முன்னாள் உயர் அலுவலர்களான ஏர் வைஸ் மார்ஷல் சஞ்சிப் போர்டோலோய், ஏர் கமடோர் பி.சி. க்ரோவர், பிரிக்கேடியர் டிங்கர் அடீப் ஆகியோர் கூட்டாக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், "சிறிய அரசியல் ஆதாயங்களுக்காக ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை இத்தகைய இப்படித் திரிப்பது மிகவும் வருந்தத்தக்கது. சந்தேகத்திற்கு இடமின்றி, சிறுமையானது.

இத்தகைய அறிக்கைகள் எப்போதும் உலகின் சிறந்த தொழில்முறை சக்திகளாக அறியப்படும், சுதந்திரம் முதல் களத்தில் நின்று செயலில் அதனை நிரூபித்துவரும் நமது ஆயுதப்படைகளின் மன உறுதியும், அழியாத மனநிலையும் குறைமதிப்பிற்கு உள்படுத்துகின்றன.

1962ஆம் ஆண்டு சீனாவுடனான யுத்தத்தையும் நாங்கள் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். அப்போது இந்தியா முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் இருந்தது. அந்தப் போரில் நாங்கள் முற்றிலும் ஆயத்தமாகாமல் பிடிபட்டது மட்டுமல்லாமல், நம் நாடு சீனாவிடம் மிகவும் அவமானகரமான தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. எங்கள் வீரர்கள் போராடி, சீனாவிற்குப் பெரும் சேதங்களை ஏற்படுத்தினர்.

தற்போதைய லடாக் களேபர சர்ச்சையும் அப்போதைய அந்த இமாலய தவறுகளின் விளைவாகவே ஏற்பட்டது.

இந்திய, சீனப் படைகளுக்கு இடையில் லடாக் எல்லையில் தற்போது நிலவும் நிலைப்பாடு குறித்து ராகுல் காந்தியின் சமீபத்திய விரும்பத்தகாத ட்வீட்டுகள் / கருத்துகள் குறித்து நாங்கள் தீவிரமாகக் கவலை கொண்டுள்ளோம்.

பாகிஸ்தான் குறித்த ராகுல் காந்தியின் முந்தைய அறிக்கைகள் பாகிஸ்தான் அரசும், அதன் ராணுவமும் ஆதரித்து சர்வதேச அளவில் செய்தியாக்கின. தேசியவிரோத சக்திகளை ஊக்குவிக்கும் வகையிலேயேதான் அந்த அறிக்கைகள் இருந்தன.

இதுபோன்ற விரும்பத்தகாத, இழிவான கருத்துள்ள அறிக்கைகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்க விரும்புகிறோம். உலகின் மிகக் கடினமான நிலப்பரப்பில் வீரர்கள் தங்களது உயிரைப் பணயம்வைத்து நாட்டைக் காக்கும் வேலைசெய்கிறார்கள்.

அவர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதாக ராகுல் காந்தியில் அறிக்கைகள் உள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.