ETV Bharat / bharat

கோவிட்-19 நோயிடம் ராணுவத்தினர் ஜாக்கிரதையாக இருங்கள் - முப்படை தலைமை தளபதி அறிவுறுத்தல் - coronavirus CDC Bipin Rawat

டெல்லி : கோவிட்-19 நோயிடமிருந்து பாதுகாப்பு படையினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அறிவித்துள்ளார்.

general bipin rawat
general bipin rawat
author img

By

Published : Apr 26, 2020, 9:10 PM IST

இதுகுறித்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறுகையில், "கோவிட்-19 பெருந்தொற்றை நாடு எதிர்கொண்டுவரும் இந்த சூழலில், அனைத்து பாதுகாப்பு படையினரும் அரசு, பொதுமக்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும்.

இதற்கு முதலில் நாம் இந்த நோயிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால், நாம் கோவிட்-19 நோய்க்கு இரையானால் மக்களுக்கு எப்படி உதவ முடியும்.

இதன் காரணமாக, முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், நோயால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை இந்த தேசம் நல்ல நிலையிலேயே உள்ளது. வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் இந்த நிலை தொடரும்.

ஊரடங்கு காலத்தில் மக்கள் பொறுமை இழக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் யாரும் தங்களது பொறுமையை இழக்க வேண்டாம், ஒழுக்கம் மிகவும் முக்கியம்" என்றார்.

இதையும் படிங்க : மசூதிகள் கரோனா ஹாட்ஸ்பாட்டுகள்: பாகிஸ்தான் அரசை எச்சரிக்கும் மருத்துவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.