தலைநகர் டெல்லியில் பீசா டெலிவரி பாயாக பணிபுரியும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக, அவர் பீசா டெலிவரி செய்த 72 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளி, தொடர்பின்மை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படும் என்று ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் உறுதி அளித்திருந்த சூழலில், பீசா டெலிவரி செய்யும் நபருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, வருத்தம் தெரிவித்துள்ள (பாதிக்கப்பட்ட பீசா டெலிவரி செய்யும் நபர் பணிபுரிந்த) BOX8 நிறுவனம், "தென் டெல்லியின் மால்வியா நகரில் செயல்பட்டு வந்த உணவகத்தை அடுத்த 14 நாட்களுக்கு மூடுவதாக அறிவித்துள்ளது. இதனிடையே, அந்த நபருடன் தொடரில் இருந்த அனைத்து வாடிக்கையாளர்களையும் தொடர்பு கொண்டதாகவும், குறிப்பிட்ட அந்த உணவகம் உடனடியாக மூடப்பட்டுள்ளதாகவும் BOX8 நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி ஆட்சியர் பிஎம் மிஷ்ரா, "இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபருடன் பணிபுரிந்த 16 ஊழியர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட உணவகத்திலிருந்து உணவு வாங்கிய 72 வீடுகளையும் தனிமைப்படுத்தியுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க : சீனாவிடமிருந்து 5 லட்சம் துரித பரிசோதனை கருவிகள் பெறப்பட்டன - சுகாதாரத்துறை