சான் ஃபிரான்சிஸ்கோ: ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருக்கும் ஆப்பிள் கேம்ஸ் செயலியையும், இதர விளையாட்டுக்களையும் சீன அரசின் நெருக்கடியால், அதனை புதுப்பிக்கும் முயற்சியை ஆப்பிள் நிறுவனம் தற்காலிகமாக கைவிட்டுள்ளது.
இதன் முக்கிய அம்சங்கள்:
- ஆப்பிள் நிறுவனத்தின் பல்லாயிரக்கணக்கான வருவாய் ஈட்டும் விளையாட்டுகள் அடங்கும்.
- உலகின் மிகப் பெரிய இணைய விளையாட்டு சந்தையை சீனா தன் வசம் வைத்துள்ளது.
- ஆண்டுக்கு இதன் வியாபார மதிப்பு 16.4 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. இதுவே அமெரிக்காவில் 15.4 பில்லியன் டாலர் தான்.
- தற்போதைய சூழலில் சீனர்களுக்கு 60ஆயிரம் விளையாட்டுக்களை ஆப்பிள் நிறுவனம் வழங்கிவருகிறது
- தனது விளையாட்டு தயாரிப்பாளர்களிடம், ஜூன் 30 முதல் விளையாட்டுகளை வெளியிட சீன அரசின் அனுமதியை பெறுவது அவசியம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
- மொத்த ஆப்பிள் நிறுவனத்தின் விளையாட்டு வருவாயில், சீனாவின் பங்கு மட்டும் 53 விழுக்காடு என வாயை பிளக்க வைக்கிறது.
இதையும் படிங்க: லடாக் எல்லைப் பகுதிக்கு பிரதமர் மோடி திடீர் பயணம்