ETV Bharat / bharat

நிர்பயா வழக்கு: குற்றவாளியின் மனு தள்ளுபடி!

டெல்லி: குற்றம் நடைபெறும்போது தான் சிறுவனாக இருந்த காரணத்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Nirbhaya
Nirbhaya
author img

By

Published : Jan 20, 2020, 3:21 PM IST

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குற்றம் நடைபெறும்போது தான் சிறுவனாக இருந்த காரணத்தால் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இதுகுறித்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

பானுமதி, அசோக் பூஷன், ஏ.எஸ். போபண்ணா கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்தது. பிப்ரவரி 1ஆம் தேதி மேற்கொள்ளவுள்ள தூக்குதண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றொரு குற்றவாளியான முகேஷின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்திருந்தார். மற்ற மூன்று குற்றவாளிகள் கருணை மனுவை தாக்கல் செய்யவில்லை. நிர்பயா வழக்கு குற்றவாளிகளான வினய், முகேஷ் ஆகியோரின் மறு சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஏமன் ஏவுகணைத் தாக்குதல் - 80 பேர் உயிரிழப்பு!

Intro:Body:

https://twitter.com/ANI/status/1219055864306233344

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.