ETV Bharat / bharat

"ஹத்ராஸ் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அப்பாவிகள் என நிரூபிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" - ஏபி சிங்

லக்னோ: 'ஹத்ராஸ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அப்பாவிகள் என நிரூபிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்' என சத்திரிய மகாசபா உறுப்பினர் மன்வேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

ஹத்ராஸ்
ஹத்ராஸ்
author img

By

Published : Oct 10, 2020, 4:43 PM IST

Updated : Oct 10, 2020, 5:14 PM IST

ஹத்ராஸ் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி. சிங் ஆஜராகவுள்ளார். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்திற்குச் சென்ற அவர், குற்றம்சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். சத்திரிய மகாசபா உறுப்பினர் மன்வேந்திர சிங்கும் அவருடன் சென்றிருந்தார்.

சம்பவம் குறித்த விவரங்கள், ஆதாரங்கள் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர். இது குறித்து ஏ.பி. சிங் கூறுகையில், "இந்த வழக்கில் நான் ஆஜராவதற்காக சத்திரிய மகாசபா எனக்குச் சம்பளம் அளிக்கப்போகிறது.

எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் இதில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை அரசியலாக்க அரசியல்வாதிகள் முயல்கின்றனர். முறையான விசாரணை தேவை. அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாகவில்லை. கூட்டு பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாகவில்லை.

என் கட்சிகாரருக்கு நீதி கிடைக்க போராடுவேன்" என்றார். “ஹத்ராஸ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அப்பாவிகள் என நிரூபிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என மன்வேந்திர சிங் தெரிவித்தார். முன்னதாக, ஏ.பி. சிங், ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டார் எனத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருந்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது மதிக்கத்தக்க பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல் துறையினரே தகனம் செய்ததால், இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். அப்பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Last Updated : Oct 10, 2020, 5:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.