ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் சம்பவத்தன்று கறும்பச்சை நிறத்தில் நக்ஸல் உடை அணிந்து இருந்தார்.
அப்போது அவரை வனபகரி காவல் நிலைய காவலர்கள் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் விவசாயி என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரைக் காவலர்கள் விடுவித்தனர். மேலும் பொதுமக்கள் யாரும் இதுபோன்ற உடைகளை அணிய வேண்டாம் எனவும் காவலர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து உள்ளுர் மக்களிடம் கேட்டபோது, 'இதுபோன்ற உடைகள் மலிவு விலையில் கிடைக்கிறது. அதனால் நாங்கள் வாங்கி அணிகிறோம். தற்போது காவலர்களால் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது' என்றனர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நக்ஸலைட்டுகள் அதிகம் காணப்படுகின்றனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.
இதையும் படிக்கலாமே