தெலங்கானாவில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு உடனடியாக தூக்கு தண்டனை விதிக்க வழிவகை செய்யும் புதிய சட்ட மசோதா ஒன்றை ஆந்திராவில் ஆளும் அரசான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கொண்டுவந்தார்.
அதன்படி ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான, வன்கொடுமைகளை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றம் அமைக்க வழி வகை செய்யும் சட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னதாக ஒப்புதல் அளித்திருந்தார்.
இதனையடுத்து இன்று சட்டப்பேரவையில் திஷா சட்டம் நிறைவேறியது. இதற்கு அம்மாநில பெண்கள் மத்தியில் வரவேற்பு வரவேற்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க...'வித்தியாசமான கதைக்களம் கொண்ட கதைகளை தயாரிப்பேன்'- பா. ரஞ்சித்