ETV Bharat / bharat

இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு மும்பை போலீஸ் சம்மன்! - அனுராக் காஷ்யப்புக்கு மும்பை போலீஸ் சம்மன்

மும்பை: நடிகை பாயல் கோஷ், இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், நாளை காலை 11 மணியளவில் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு அனுராக்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

nu
nu
author img

By

Published : Sep 30, 2020, 6:36 PM IST

பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் மீது சில தினங்களுக்கு முன்பு நடிகை பாயல் கோஷ் ’Me Too’ இயக்கத்தின்கீழ் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் பல இந்தி திரைப்பிரபலங்கள் அனுராக்கிற்கு ஆதரவாகக் குரல் ஏழுப்பினர். மேலும், அனுராக் தரப்பிலிருந்து பாயலின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, நடிகை பாயல் கோஷ், மும்பை, வெர்ஸோவா காவல் நிலையத்தில் இயக்குநர் அனுராக் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். ஆனால் இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தபோதிலும் விசாரணை நடத்துவதில் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நடிகை பாயல் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலேவை சந்தித்து அனுராக் காஷ்யப் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இயக்குநர் அனுராக் காஷ்யப், நாளை (அக்.01) காலை 11 மணியளவில் வெர்ஸோவா காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் நடிகை பாயல் கோஷ், மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து ஒய் பிரிவு பாதுகாப்பை தனக்கு அளிக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.