வியாழக்கிழமை காலை, ராய்கரின் சல் வன எல்லைக்குள்பட்ட பெஹ்ராமர் கிராமத்தில் ஒரு வீட்டின் பின் பகுதியில் ஒரு கொம்பன் யானையின் சடலம் காணப்பட்டதாக தரம்ஜெய்கர் பகுதியின் வன அலுவலர் பிரியங்கா பாண்டே தெரிவித்தார்.
யானனையின் உடல் யாருடைய வீட்டின் பின்னால் உள்ளது என்பதை கிராமவாசிகள் தெரிவித்த பின்னர் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.உடற்கூறாய்வுக்கு பிறகு இறப்புக்கான காரணம் அறியப்படும் என்று பாண்டே கூறினார்.
அதேபோல், கடந்த செவ்வாய்க்கிழமை, ராய்காரின் தரம்ஜெய்கர் வனப்பிரிவு கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் மின்சார கம்பியில் மின்சாரம் பாய்ந்து யானை ஒன்று இறந்தது. இந்த மரணம் தொடர்பாக அரசு மின் நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அதே நாளன்று நடந்த மற்றொரு சம்பவத்தில், தமாத்ரி மாவட்டத்தில் சதுப்பு நிலத்தில் சிக்கி யானைக்குட்டி ஒன்று இறந்தது.
அதுமட்டுமின்றி, கடந்த வாரம் சூரஜ்பூர் மாவட்டத்தின் பிரதாப்பூர் வன வரம்பிலிருந்து ஜூன் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இரண்டு யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்றொரு பெரிய யானை அண்டை மாவட்டமான பால்ராம்பூர் மாவட்டத்தில் ஜூன் 11 அன்று இறந்து கிடந்தது.
பின்னர், மூன்று மாநில வன அலுவலர்கள் மற்றும் ஒரு காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பால்ராம்பூரில் யானையின் மரணம் தொடர்பாக கடமை தவறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அப்பகுதி வன அலுவலர், நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.