ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.ஆர். வெங்கடாபுரம் என்ற கிராமத்தில் இயங்கி வந்த எல் ஜி பாலிமர்ஸ் தனியார் ரசாயன தொழிற்சாலையில் மே மாதம் எழாம் தேதி நடைபெற்ற விஷ வாயுக் கசிவு விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுது.
பராமரிப்பு பணி காரணமாக சில நாட்கள் முடங்கியிருந்த தொழிற்சாலை நீண்ட நாட்களுக்குப் பின் இயங்கத் தொடங்கியபோது ஏற்பட்ட கவனக் குறைவு காரணமாக ஸ்டைரீன் எனும் வாயு கசிந்து, ஒரு சிறுமி உள்பட 14 பேர் உயிரிழந்தனர். அத்துடன் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த விஷவாயு கசிவில் பாதிக்கப்பட்டுள்ள மேலும் ஒரு நபர் தற்போது உயிரிழந்துள்ளார். வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கடலி சத்திய நாராயணா என்ற நபர் மருத்துவச் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பிய நிலையில், அவருக்கு மீண்டும் சுவாசப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டிலேயே மயங்கிவிழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதன் காரணமாக விஷவாயு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடிய ஆக்ரா சந்தை!