ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திரகிரி மக்கள் மகர சங்கராதியை முன்னிட்டும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும்விதமாகவும் பாரம்பரிய விளையாட்டான எருது விடும் விழாவினை தொடங்கியுள்ளனர்.
விழாவில் எருதுகளை அழகாக அலங்கரித்து வழிபாடுகள் செய்யப்பட்டன. பின்னர் எருதுகளின் கொம்புகளில் பரிசுகளைக் கட்டி கூட்டத்தில் விடப்பட்டன.
போட்டியில் கலந்துகொண்ட இளைஞர்கள் எருதுகளை ஆர்வமுடன் தழுவினர். போட்டியில் வெற்றிபெற்ற இளைஞர்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் சித்தூர் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பார்த்துச் சென்றனர்.
இதையும் படிங்க: பிரதமருக்கு காங்கிரஸ் பதிலடி