ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது பெதாபுரம்சட்டமன்றத் தொகுதி. அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அம்மாநில துணை முதலமைச்சருமான சின்னராஜாப்பா நேற்று அங்கு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
இந்நிலையில், அத்தொகுதிக்குட்பட்ட ஹுசேன் புறம் (Hussein Puram Village) என்ற கிராமத்தில் பரப்புரைக்காக வந்தபோது, அவரைஅந்த ஊர் மக்கள்தடுத்து நிறுத்தினர்.
முன்னதாக, அவர் தங்களுக்கு கொடுத்திருந்த வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறிய அவரை பேச விடாமல் தடுத்து நிறுத்தி, திரும்பிச் செல்லுமாறு வலியுறுத்தினர். இதன் பிறகு, வேறுவழியின்றி அவர் திரும்பிச்சென்றார்.