ஆந்திராவில் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பக்கோரியும் அலுவலகங்களில் ஊழியர்கள் நூறு சதவீதம் பதிவோடு இயங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இரண்டு மாதங்கள் ஊரடங்கை தொடர்ந்து தலைமை செயலகம் உள்பட பல அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியது.
கடந்த வாரம் திறக்கப்பட்ட தலைமை செயலகத்தில் அதிகமான ஊழியர்கள் ஹைதராபாத்தில் இருந்து வந்துள்ளனர். அவர்களில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து அங்குள்ள ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது, அதில் தற்போது மற்றோருவருக்கும் தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது.
இதையும் சேர்த்து கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் புதிதாக 141 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. மொத்த எண்ணிக்கை 4,112ஆக அதிகரித்துள்ளது. மேலும் மூன்று நபர்கள் மரணித்ததால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையின் கட்டத்தில் சிறப்பு பாதுகாப்பு படை வீரர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால். அங்கு பணியாற்றி வந்த மற்ற ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்கும்படி அறிவுறத்தப்பட்டுள்ளது.
தற்போது தொற்று பரவல் அதிகரித்துவரும் காரணம், கிழக்கு கோதாவரி, குண்டூர் மாவட்டங்களுக்கு வெளிமாநிலங்களில் இருந்து ஆந்திரவிற்கு வரும் மக்களால்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டூரில் காய்கறி விற்கும் வியாபாரிக்கு ஏற்பட்ட தொற்றின் காரணமாக வைரஸ் அதிகமானோருக்கு பரவியிருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் காக்கிநாடாவில் 53 வயது நபர் ஒருவர் கரோனாவால் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: 'கரோனாவை மீறி பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர் இலக்கை எட்டும்' - ராம் மாதவ் உறுதி