ETV Bharat / bharat

கரோனா விவகாரத்தை அரசியலாக்கும் ஆந்திர அரசு - பவன் கல்யாண் குற்றச்சாட்டு

ஹைதராபாத்: கரோனா விவகாரத்தை ஆந்திர மாநில அரசு அரசியலாக்குவதாக ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Andhra
Andhra
author img

By

Published : Apr 18, 2020, 11:33 AM IST

காணொலி சந்திப்பு வாயிலாக ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் தனது கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பில் கரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்து தவிக்கும் அன்றாட கூலித் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும், மக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

அப்போது பேசிய பவன் கல்யாண், ”கரோனா விவகாரத்தை இந்த அரசு சரிவர கையாளவில்லை. இந்தப் பேரழிவு காலத்தில் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் எந்த வேலையையும் மாநில அரசு மேற்கொள்ளவில்லை.

இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாமென நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறிவருகிறோம். இது ஒரு தனிப்பட்ட பிரச்னை என்று நினைத்து மாநில அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது” என்றார்.

இதையும் படிங்க: முதலமைச்சருக்கு கொரோனா தொற்றுன்னா என்னனு தெரியல-அய்யனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.