நிறைமாத கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தும் கலாசாரம் பின்பற்றப்பட்டுவரும் இந்நாட்டில், ஒரு வித்தியாசாமான முயற்சியாக ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த லங்கா பாபுமோகன் என்னும் விவசாயி ஒருவர் தான் வளர்க்கும் அனைத்து பசுக்களுக்கும் ஒரு பெண்ணைப் போல் பாவித்து, அவை கருவுற்றிருக்கும்போது அதனுக்கும் வளைகாப்பு நடத்திவருகிறார்.
இம்முறை தாய் பசுவுக்கும் அதனுடைய கன்றுக்கும் சேர்த்து வளைகாப்பு நடத்தினார். இவரின் இந்த அன்பைக் கண்டு ஊர்மக்களை வியப்பில் ஆழ்ந்தனர். அந்த இரண்டு பசுக்களுக்கும் மஞ்சள், குங்குமம், மாலை அணிவித்து வளைகாப்பு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட உறவினர்களுக்கு பாயாசம், வடை என சுவையான உணவுகள் அளிக்கப்பட்டது.
மேலும் படிக்க: கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு - உயிரைக் காப்பாற்றிய தீயணைப்புத்துறையினர்!