மத்திய பிரதேச ஆளுநராக உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் இன்று (புதன்கிழமை) பதவியேற்பார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போதைய ஆளுநர் லால்ஜி டாண்டனின் உடல்நலக்குறைவைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச ஆளுநராக படேலுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் இன்று பொறுப்பேற்றுக்கொள்கிறார். அவருக்கு மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அஜய் குமார் மிட்டல் மாலை 4.30 மணிக்கு ராஜ் பவனில் நடைபெறும் எளிய விழாவில் சத்தியப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
லால்ஜி டாண்டன் லக்னோவில் உள்ள மெடந்தா மருத்துவமனையில் சுவாசப் பிரச்சினைகள், சிறுநீர் கழிப்பதில் சிரமம் மற்றும் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
ஆனந்திபென் பட்டேல், உத்தரப் பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்படும் முன்னர் சிறிது காலம் மத்தியப் பிரதேசத்தின் ஆளுநராக ஏற்கனவே பதவி வகித்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: சீனாவின் ஆதிக்க நடவடிக்கையால் சர்வதேச புவிசார் அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம்