ETV Bharat / bharat

மத்தியப் பிரதேச ஆளுநராக ஆனந்திபென் படேல் பதவியேற்பு! - up governor

போபால்: மத்தியப் பிரதேசத்தின் ஆளுநராக ஆனந்திபென் படேல் பதவியேற்றுக்கொண்டார்.

gover
gover
author img

By

Published : Jul 2, 2020, 7:34 AM IST

மத்தியப் பிரதேசத்தின் ஆளுநர் லால்ஜி டாண்டன், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதையடுத்து, உத்தரப்‌ பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் கூடுதல் பொறுப்பாக மத்தியப் பிரதேசத்தையும் கவனிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று (ஜூலை1) மாலை ராஜ் பவனில் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அஜய் குமார் மிட்டல், ஆனந்திபென் படேலுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

இந்நிகழ்வில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அரசியல் கட்சியினர், உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

படேல் உத்தரபிரதேச ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்னரே, மத்தியப் பிரதேச ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.