உத்தரப்பிரதேசம் மாநிலம் சிறப்பு டாஸ்க் போர்ஸ் நடத்திய ரெய்டில், ஒரே பெயரில் நான்கு ஆசிரியர்கள் பணியாற்றி வந்துள்ளது தெரியவந்துள்ளது. அதில், சுவாதி திவாரி என்ற பெயரில் இரண்டு பெண்கள் தியோரியாவிலும், தலா ஒருவர் பராபங்கி மற்றும் சீதாபூரிலும் பணியாற்றி வந்துள்ளனர்.
டாஸ்க் போர்ஸ் நடத்திய விசாரணையில், உண்மையான சுவாதி திவாரி கோரக்பூரில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பராபங்கியில் பணியாற்றி வந்த போலி ஆசிரயரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதே போல்,தியோரியாவில் பணியாற்றிய இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில், சீதாபூரில் பணியாற்றிய சினேகலதா மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
முன்னதாக ஜூன் மாதத்தில், அனமிகா சுக்லா என்ற பெண்ணின் அடையாளம் மற்றும் ஆவணங்களைப் பயன்படுத்தி மாநிலம் முழுவதும் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாஸில் (கேஜிபிவி) கிட்டத்தட்ட இரண்டு டஜன் பெண்கள் முழுநேர அறிவியல் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.