2014 பொதுத்தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி பாரதிய ஜனதா மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. அதன்பின்னர் ஆம் ஆத்மி தொண்டர்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் கவனத்துடன் பயணம் செய்தார். மத்திய அரசு எதிர்ப்பு என்ற அரசியலை கையிலெடுக்காமல் ஊழல் எதிர்ப்பு, குடிமக்கள் ஆதரவு என அவரது செயல்பாடுகள் தொடர்ந்தன. இதன் விளைவாக 2015ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி பெரும் வெற்றியை ருசித்தது.
இந்நிலையில் 2020 சட்டசபை தேர்தலில் டெல்லி வாக்காளர்களை பாஜக மத ரீதியில் இருதுருவப்படுத்த முயற்சிக்கிறது. பாஜகவின் இந்த ஆக்கிரமிப்பு பரப்புரையை சமரசமின்றி கருத்து ரீதியாக எதிர்க்கும் ஒரு அஞ்சாத தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தன்னைக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்.
மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக கடந்த 55 நாள்களுக்கு மேலாக ஷாகீன் பாக் பகுதியில் நீடிக்கும் போராட்டம் தேர்தலின் போக்கை மாற்றியுள்ளது.
இந்த தேர்தலில் வெற்றிபெற மின்சாரம், குடிநீர், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பிரச்னைகளில் அரசின் பணி போதுமானதாக இருக்கும் என நினைத்தார். ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை. பாஜக தனது வாக்காளர்களை மீண்டும் பெற விரும்புகிறது.
அவர்கள் கெஜ்ரிவாலின் அரசியல், விருப்பங்கள் மற்றும் முன்னுரிமைகளை எதிர்ப்பதை தெளிவுப்படுத்துகிறார்கள். 2015ஆம் ஆண்டு தேர்தல் போல் அல்லாமல் இந்தத் தேர்தலில் அவர்களின் எதிரி ஆம் ஆத்மி. காங்கிரஸை அவர்கள் குறிப்பிடுவதே இல்லை.
சுருக்கமாக வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால் இந்த தேர்தல் இரு குதிரைகளுக்கு இடையே நடக்கும் பந்தயம். 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் காங்கிரஸ் போட்டியிலிருந்து நழுவிவிட்டது.
இந்தத் தேர்தல் பாஜகவின் பிரித்தாளும் கொள்கை மற்றும் ஆம் ஆத்மிக்கு இடையேயான போட்டி என காங்கிரஸ் தலைவர்களும் உணர்ந்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்களில் பலர் கட்சித் தலைமை மேற்கொண்டு வரும் முயற்சிகளில் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக பாரம்பரிய கட்சிக்கு வாக்களித்தவர்களும் அதிருப்தியில் உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்களின் உறவினர்களுக்கும் ஆம் ஆத்மி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது. அவர்களில் ஒருவர் முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) மகாபல் மிஸ்ரா. அவரது மகன் தேர்தல் சீட்டுக்காக, காங்கிரஸில் இருந்து சென்றுவிட்டார். மிஸ்ரா தற்போது கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் உருகும் வேகம் ஆம் ஆத்மியின் கலவையை மாற்றுகிறது. தற்போது அவர்கள் காங்கிரஸின் வாக்காளர் தளத்தை பிரதிபலிக்கின்றனர். சிறுபான்மையினர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை தீவிரமாக ஆதரிக்கின்றனர்.
இந்த வாரங்களில் ஷாகீன் பாக் போராட்ட பகுதிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் செல்லவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் இங்கு வரும்பட்சத்தில் அது பாஜகவின் பிரித்தாளும் கொள்கையை வலுவாக்கி, ஆம் ஆத்மியின் செல்வாக்கை பதம் பார்க்கும் என்பதை போராட்டக்காரர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் நீண்ட கால இருக்கை காரணமாக அவரை பாஜகவினர் வெறுக்கின்றனர். எனவே அவரை, 'பயங்கரவாதி' என்கின்றனர். ஷாகீன் பாக், ஜாமியா மில்லியா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் சமீபத்தில் நடந்த சட்டம் ஒழுங்கு வன்முறை சம்பவங்களுக்கு ஆளும் ஆம் ஆத்மி எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது. ஏனெனில் காவலர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என ஆம் ஆத்மி கூறுகிறது.
இதன் உண்மையை வெளிக்கொணருவதில் அமித் ஷா உள்ளிட்டோருக்கும் தெளிவற்ற நிலை உள்ளது. அனுராக் தாகூர் போன்ற அமைச்சர்களின் முழக்கங்களுக்கும் நியாயம் உள்ளது. ஷாகீன் பாக் போராட்டத்துக்கு எதிராக பாஜக பரப்புரையை மேற்கொள்ளும் முன்னரே, இது பிரித்தாளும் சூழ்ச்சி எனக் கூறி ஆம் ஆத்மி அழகாக அமர்ந்துக்கொண்டது.
எனினும் கடந்த சில வாரங்களில் பாஜக கொஞ்சம் கொஞ்சமாக மீட்கப்பட்டதாக தெரிகிறது. ஆம் ஆத்மியின் துடைப்பம் (கட்சி சின்னம்) தேர்தலை (வெற்றியை) துடைக்க முடியாது என மக்கள் பேச தொடங்கியுள்ளனர்.
எனினும் அவர்கள் காங்கிரஸ் உருகி ஆம் ஆத்மிக்கு பலம் சேர்க்கும் உண்மையை கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. சமீபத்திய கருத்துக் கணிப்புகள் மொத்தமுள்ள 70 இடங்களில் 59-60 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றிப் பெறும் என கூறுகின்றது.
இந்த கருத்துக் கணிப்புகள் படி டெல்லி தேர்தல் முடிவுகள் அமைந்தால் அது நரேந்திர மோடி-அமித் ஷா தலைமைக்கு மட்டுமல்ல காங்கிரஸ் கட்சிக்கும் பின்னடைவாக இருக்கும். மேலும் இரு கட்சிகளும் சிக்கலில் இருப்பதை இது உணர்த்தும்.
இதையும் படிங்க : 'இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா?' - பிரியங்கா காந்தி