கரோனா பொதுமுடக்கம் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் பற்றி பல கதைகளை படித்திருப்போம். ஆனால், இந்தக் கதை முற்றிலும் வேறுபட்டது.
கரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியை ஐரோப்பியர் ஒருவர் சவாலாக மாற்றியுள்ளார். இத்தாலியைச் சேர்ந்தவர் டேவிட் (47). இவர் கடந்த ஆணடு கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அப்போது, டேவிட் நம்பிக்கையை இழக்காமல், மீனாட்சியம்மா, அவரது குழுவினருடன் இணைந்து களரிக் கலையை அவர் கற்கத் தொடங்கினார். ‘மனமிருந்தால் மார்க்கமுண்டு’ என்ற பழமொழி அவருக்கு சரியாக இருந்தது. மீனாட்சியம்மா, டேவிட் தங்குவதற்கு ஒரு இடத்தை வழங்கினார்.
களரியில் பல மணி நேரம் அவர் பயிற்சி செய்து, பல புதிய நுட்பங்களையும் நகர்வுகளையும் 6 மாதங்களுக்குள் கற்றுகொண்டார். அதேபோல், மலையாள மொழியை கற்றுக்கொள்வதோடு, கேரளாவில் நல்ல நண்பர்களையும் அவர் உருவாக்கினார்.
தனது 47 வயதில் இளங்கலை பட்டம் பெற்ற டேவிட், தனது இருபது வயதில் இருந்தே உலகம் முழுவதும் பயணம் செய்யத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, டேவிட் இத்தாலிக்கு திரும்ப உள்ளார்.
இதையும் படிங்க: கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து அசத்திய கேரள வீரர்