ETV Bharat / bharat

பூச்சிக்கொல்லிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா மத்திய அரசு? - central govt take initiative to end pesticides

நாட்டில் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் 27 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்க உள்ளதாகவும், இது குறித்து மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் உற்பத்தி நிறுவனங்கள் 45 நாள்களுக்குள் பதிவு செய்யலாம் என்றும் மத்திய விவசாயத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பூச்சிக்கொல்லிக்கு முற்றுபுள்ளி வைக்கிறதா அரசு?

author img

By

Published : Jun 19, 2020, 7:52 PM IST

பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் நெல், காய்கறிகள், பழங்கள் மற்றும் நறுமணப் பொருள்கள் சாகுபடிகளுக்காக பெருமளவில் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், பூச்சிக்கொல்லிகள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் தடை செய்யவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தடை செய்யப்படவுள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளின் பட்டியலில், மோனோகுரோடோபாஸ், குயினல்பாஸ், ஆக்ஸிஃப்ளூர்பென் உள்ளிட்ட மருந்துப் பொருள்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

மோனோகுரோடோபாஸ்:

கடுமையான விஷ பூச்சிக்கொல்லியான இதை விவசாயிகள் பரவலாக பயன்படுத்துகின்றனர். இந்த பூச்சிக்கொல்லி சந்தைக்கு வரும்போதே 'மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது' எனக் குறிக்கும் சிவப்பு லேபிளுடன் வருகிறது. இந்த மோனோகுரோடோபாஸின் நச்சு தன்மையால் பல்வேறு விவசாயிகள் உயிரிழந்தனர்.

இந்த பூச்சிக்கொல்லி பறவைகள், பலூட்டிகள், மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை. பெரும்பாலான சந்தைகளில் விற்பனையாகும் காய்கறிகளில் இந்த மோனோகுரோடோபாஸின் தாக்கம் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. இந்த பூச்சிக்கொல்லியை உற்பத்தி செய்பவர்கள், இதன் நச்சுத்தன்மை குறித்த முழுமையான தகவலை அரசிடம் வழங்குவதும் இல்லை.

மேலும், பூச்சிக்கொல்லி பயன்படுத்திய பிறகு நெல், கரும்பு, பருத்தி, தேங்காய், காபி உள்ளிட்டவற்றை எத்தனை நாள்களுக்குப் பிறகு அறுவடை செய்யவேண்டும் என்று தெளிவான விளக்கமும் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது இல்லை.

இதன் காரணமாக பூச்சிக்கொல்லி தெளித்த சில நாள்களிலேயே விவசாயிகள் அறுவடை செய்து அந்த பொருள்களை சந்தைக்கு அனுப்புகின்றனர். இதை சாப்பிடும் பொதுமக்களுக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. இந்த அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துக்கு 112 நாடுகள் தடை விதித்துள்ளன.

குயினல்பாஸ்:

இந்த பூச்சிக்கொல்லி மருந்துப் பொருளும் இந்திய விவசாயிகளால் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை உலக சுகாதார நிறுவனம் 'மித அபாயகரமான' பூச்சிக்கொல்லி என தரப்படுத்தியுள்ளது. இது சந்தைக்கு வரும்போதே 'அதிக நச்சு தன்மை கொண்டது' என குறிப்பிடும் மஞ்சள் லேபிளுடன் வருகிறது. சோளம், மிளகாய், பருத்தி உள்ளிட்ட பயிர்களில் பரவலாக தெளிக்கப்படும் இந்த பூச்சிக்கொல்லி மருந்தை 30 நாடுகள் தடை செய்துள்ளன.

சுவாச பிரச்னை ஏற்படுத்தும் இந்த பூச்சிக்கொல்லியை ஐரோப்பிய நாடுகள் முதல்தர அபாயகர மருந்தாக வகைப்படுத்தியுள்ளது. குயினல்பாஸை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த பூச்சிக்கொல்லியை தெளிப்பதால் மிளகாயில் ஏற்படும் மாறுதல் குறித்து தெளிவாக விளக்குவதில்லை.

ஆக்ஸிஃப்ளூர்பென்:

இது மிதமான நச்சு கொல்லியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவதால், ரத்த சோகை மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் ஆபாயம் உள்ளது. ஏற்கனவே இரண்டு நாடுகளில் இந்த பூச்சிக்கொல்லி தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தை தயாரிக்கும் நிறுவனங்கள் நெல், நிலக்கடலை, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்டவற்றில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த தகவல்களை வகைப்படுத்துவது கிடையாது. இந்த பூச்சிக்கொல்லி தாவரங்கள், மீன் மற்றும் இறால்களைப் பாதிப்பதோடு சுற்றுச்சூழலையும் மோசமாக பாதிப்படையச் செய்கிறது.

மனிதர்கள் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலை பெற்றவுடன், பூச்சிக்கொல்லிகளின் விற்பனை, உற்பத்தி ஆகியவற்றிக்கு தடை விதிக்கப்படும் என்று மத்திய விவசாயத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.