புதுச்சேரி:புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தின் பிஆர்டிசியில் 200க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிமாநிலத்திற்கு செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. சாலைபோக்குவரத்து கழகம் நஷ்டத்தில் செயல்படுவதால் அதன் பேருந்துகள் மற்றும் வழித்தடங்களை தனியாருக்கு ஏலம் விடுவதாக அம்மாநில அரசு அறிவிப்பினை வெளியிட்டது.
இதற்கு புதுச்சேரி அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து பலகட்ட போராட்டங்கள் நடத்திவருகின்றனர். இந்நிலையில், அரசு பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிடக் கோரி நாளை (டிசம். 28) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக அனைத்து பிரிவு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக அனைத்து பிரிவு தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் நாளை முதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தயார் - முதலமைச்சர் நாராயணசாமி