இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய சேவைகளுக்கு வெளியே செல்லும் மக்கள் முகக் கவசங்களை அணிய வேண்டும் என்றும், பொது இடங்களில் தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும் சிலர் அரசின் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாமல் வெளியே சென்றுவருகின்றனர். இந்நிலையில், கோவிட்-19 பரவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முகக்கவசம் அணிந்த டிசைனில் உருவாக்கப்பட்ட கேக்கை வெட்டி அகமதாபாத்தில் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.
இது குறித்து அவர் மனைவி ப்ரீத்தி பட்டேல் என்பவர் கூறுகையில், "எனக்கு சமைப்பது மிகவும் பிடிக்கும். இந்த சமையல் மூலம் கரோனா பரவல் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். இதனால் எனது கணவரின் பிறந்த நாளில் முகக் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கேக்கை செய்தேன்" என்றார்.
கேக் மீது எரியும் மெழுகுவர்த்தியை ஊதுவதன் மூலமாக கரோனா பரவும் என்பதால், ஹேர் ட்ரையர் மூலம் அவர் மெழுகுவர்த்தியை அணைத்தார். கணவரின் பிறந்த நாளுக்கு மனைவி செய்த இந்த விழிப்புணர்வு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
இதையும் படிங்க: மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் வல்லுநர் குழு!