குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பாக நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.
இதில், அக்கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான ஓவைசி கலந்துகொண்டார். மேடையில் பேசுவதற்காக அவர் சென்றபோது, மாணவி ஒருவர் மேடையில் ஏறி பாகிஸ்தான் வாழ்க என கோஷமிட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
பின்னர், அந்த மாணவி கைது செய்யப்பட்டு பிரிவு 124ஏ கீழ் (தேச துரோக) அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, பிணை கோரி மாணவி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷமிட்ட மற்றொரு மாணவி கைது!