டெல்லி: தமிழ் மொழியின் நவீன கவிதையின் முன்னோடியான மகாகவி பாரதியார் இன்று தனது 138ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு நடைமுறைகளுக்காக குரல் கொடுத்தவர்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தமிழ் மொழியின் சிறப்பை உலகறியச் செய்தவர்களில் ஒருவரான மகாகவிக்கு பாஜகவின் மூத்தத் தலைவரும், மத்திய உள் துறை அமைச்சருமான அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மொழியில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், பாரத மாதாவின் புதல்வன் என பாரதியாரைப் பாராட்டியுள்ளார். பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு முன்னோடி, தேசிய ஒற்றுமையின் சின்னம் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
பாரதியின் தேசபக்தி கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தின்போது மக்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்தன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மகாகவியை சிறப்பித்தது திமுக - ஸ்டாலின்