ETV Bharat / bharat

அமித் ஷா தலைமையில் கூட்டம்: அடுத்த பாஜக தலைவர் யார்?

டெல்லி: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மாநில தலைவர்களுடன் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார்.

Amit Shah to meet BJP national office bearers, party state-heads today
author img

By

Published : Jun 13, 2019, 12:22 PM IST

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் இன்று பாஜக மாநிலத் தலைவர்களுடன், தேசிய தலைவர் அமித் ஷா கூட்டம் நடத்தவுள்ளார். இதற்காக தற்போது அமித்ஷா, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளார். இந்தக் கூட்டத்தில் பாஜகவின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மாநில வாரியாக பாஜக செயல்பாடுகள், தென் மாநிலங்களில் தோல்வி, சறுக்கல் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

பாஜக விதிகளின்படி அக்கட்சியைச் சேர்ந்தவர் அமைச்சர் உள்ளிட்ட அரசு பதவிகளிலிருந்தால், கட்சியில் உள்ள பொறுப்பிலிருந்து விலக வேண்டும். அதன்படி, அமித் ஷா தேசிய தலைவர் பதவியிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது.

Intro:Body:

AMit shah meeting

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.