ETV Bharat / bharat

'சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவர்' - அமித் ஷா

திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Amit Shah
author img

By

Published : Sep 9, 2019, 5:08 PM IST

அஸ்ஸாம் மாநிலத்தில் வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி சார்பாக நடந்த நிகழ்ச்சியில் உள் துறை அமைச்சர் அமித் ஷா, அம்மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனவால், நிதித் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய அமைச்சர் அமித் ஷா, "அனைத்து மாநிலங்களும் இந்தியாவின் ஒரு பகுதியே. இந்த உணர்வை பரப்ப காங்கிரஸ் இல்லாத வட கிழக்கு மாநிலங்களை உருவாக்க வேண்டும். வட கிழக்கைச் சேர்ந்த எட்டு மாநிலங்களையும் வட கிழக்கு ஜனநாயக கூட்டணி ஆள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

வட கிழக்கு மாநிலங்களில் பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ் கையாண்டது. நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து வட கிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் ஒதுக்கிவைத்தது. அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை கண்டு பல மாநிலங்கள் அஞ்சுகின்றன. அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலிருந்தும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். எங்களிடம் இதற்கான திட்டம் உள்ளது" என்றார்.

Intro:Body:

Amith Shah speech on Assam

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.