சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களை விடுவிப்பது தொடர்பான முடிவு எடுப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஆலோசனை நடத்தினார். இதேபோல் அவர் பிரதமர் மோடியையும் சந்தித்து பேச உள்ளார்.
ஏனெனில் தமிழக அரசு இதுவரை ஆளுநருக்கு பச்சைக் கொடி காட்டிவந்த நிலையில், சஞ்சய் தத் விடுதலை விவகாரம் காரணமாக மத்திய அரசுக்கு, தமிழக அரசியல் கட்சிகள் நெருக்கடி கொடுத்தன. இதற்கிடையில் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் ஆளுநர் விரைவில் முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.